1928.09.10 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்தவர். தெல்லிப்பளை காசி விநாயகர் ஆலயத்தில் பிரதம பூசகராகப் பணியாற்றிய இவர் பாலர் ஞானோதய சபை என்ற கலை சார் நிறுவனமொன்றினை நிறுவி இசைத்துறையில் ஆர்வமுடைய பலகலைஞர்களை ஒன்றிணைத்து இசைக்கலை வளர்ச்சியில் ஈடுபட்டவர். நூல்கள் எழுதுவதிலும் ஆற்றலுடையவர் புலியூர்ப் புராணம் இவரது படைப்பாற்றலுக்குச்சான்று பகரும் நூலாகும். நூல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார். சைவ சித்தாந்த அறிவுடைய இவரது பணிகளைப் பாராட்டி வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினர் கலைச்சுடர் என்ற விருதினையும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கலைஞானகேசரி என்ற விருதினையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இப் பெரியார் 2007-06-06 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.