யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய பக்தர்கள் யாத்திரிகளாக வருகை தருகின்றபொழுது தங்கிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இடம் ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன்னர் நாகவிகாரையாக ஆரம்பிக்கப்பட்டது என கூறப்படுகின்றது. நீண்டகால யுத்தத்தின் பின்னர் அதாவது 1995ஆம் ஆண்டின் பின்னர் இவ்விகாரையானது புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டு சர்வதேச பௌத்த மத்தியஸ்தானமாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.