ஏறத்தாழ பத்து மீற்றர் அகலத்தினையும் அதேயளவு நீளத்தினையும் கொண்ட சதுர வடிவமுடைய இக்கிணறானது என்றுமே வற்றாத நீரூற்றினைக் கொண்டதாகவும் தரையிலிருந்து ஏழு மீற்றர் ஆளத்தில் நீர் மட்டத்தினை கொண்டமைந்திருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.இராமாயண காலத்தில் இலங்கைக்கு வந்த வானரப் படைகளுக்கு தாகம் ஏற்பட்டதனால் இராமன் தனது வில்லினால் குத்தி நீர் எடுத்த இடமே நிலாவரைக் கிணறு என கர்ண பரம்பரைக்கதைகள் செப்புகின்றமை குறிப்பிடத்தக்கது. நிலாவரை வற்றா நீர் ஊற்று 52 அடி நீளம்,37 அடி அகலம் கொண்ட நீள்சதுர வடிவில் நிலமட்டத்திலிருந்து 14 அடி ஆழத்தில் நீரைக்கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.