ஏக்காலத்திலும் வற்றாத நீரூற்றினைக் கொண்டதாகவும் தரையிலிருந்து ஒன்றரை மீற்றர் ஆளத்தில் நீர் மட்டத்தினை கொண்டமைந்திருப்பதும் இதன் சிறப்பம்சமாகும். இராமாயண காலத்தில் இலங்கைக்கு வந்த வானரப்படைகளுக்கு தாகம் ஏற்பட்டதனால் இராமன் தனது வில்லினால் குத்தி நீர் எடுத்த இடத்தில் வானரப்படைகள் நீரினை அருந்தியதனால்; இச்சுனையில் நீர் அருந்த விரும்பாத இராமன் ஊரெழு பொக்கனை என்ற இடத்தில் தோண்டி நீர் அருந்திய ஊற்றே பொக்கணைக் கிணறு என கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாக அறியமுடிகின்றது. இவை போல பல ஆண்டுகள் பழமைவாந்ததாகக் கருதப்படும் மானிப்பாய் கட்டுடை இடிகுண்டு, வேம்பிராய்க்கிணறு, கரவெட்டியில் அத்துளுக்கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு, தொண்டைமானாறில் பொந்துக்கிணறு போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.