Wednesday, October 30

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

0

வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைத்ததன் மூலம் 1974 08 1 ஆம் நாள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. 1974 ஜுலை 19 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எல்.எச்.சுமணதாச வித்தியாலங்காரப்பல்கலைக் கழகத்தின் இந்துக்கற்கை, தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி .கைலாசபதி அவர்கள் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தார். இவ்வாறு 1974 ஜுலை 25 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 1215 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியாகிய பிரகடனத்தின் மூலம் 1974 08-01 ஆம்  நாள் நிறுவப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் சட்டபீடம், உடற்கல்விப்பீடம் என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆரம்பத்தில் விஞ்ஞானபீடம், மனிதப்பண்பியற்பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974-09-1 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். இந்நிலைமைகளைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் 1974-10-06 ஆம் நாள் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாண வளாகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமரால் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம் என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1979-1-01 ஆம் நாள் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாக உருவாகியது. முதலாவது துணைவேந்தராக அமரர் பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்கள் கடமையாற்றினார். இராமநாதன் மண்டபம். விஞ்ஞானபீடம். மருத்துவபீடம். முகாமைத்துவ வணிகபீடம். கலைப்பீடம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இராமநாதன் நுண்கலைக்கழகம், பொறியியற்பீடம், விவசாயபீடம் ,சட்டத்தறை வித்தியானந்தன் நூலகம் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கியதாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!