Sunday, October 6

பருத்தித்துறை கலங்கரை விளக்கு

0

வடமராட்சியிலுள்ள கிராமங்கள் “பற்று”க்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பற்றுக்கும் ஒரு உடையார் பொறுப்பாகக் கடமைபுரிந்தனர். புலோலி, கற்கோவளம், தும்பளை ஆகிய கிராமங்கள் ஒரு பற்றுக்குள் அடக்கப்பட்டிருந்தன. இப் பற்றுக்கு சுப்பிரமணியம் என்பவர் உடையாராகக் கடமைபுரிந்தகாலத்தில் 1920களில் தும்பளை கடற்கரையோரமாகக் கலங்கரை விளக்கு கட்டத் தொடங்கப்பட்டு 1931இல் இயங்கத் தொடங்கியது. சாமூவேல் அன்சன்ஸ் நிறுவனத்தினர் இதைப் பொறுப்பேற்றுக் கட்டிக்கொடுத்தனர். அத்துடன் கலங்கரை விளக்கு அமைந்த பகுதியில் கடலரிப்புத் தடுப்புச்சுவரும் திரு.வேலுப்பிள்ளை ஓவசியர் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இதன் குவிவுத்தட்டு 31 மீற்றர் உயரத்தில் உள்ளது. 5 செக்கனுக்கு ஒருதடவை வெள்ளொளி தென்படும். 32 மீற்றர் உயரத்தில் வெள்ளை இயந்திரக் கோபுரத்துடன் விளக்கும் கலரியும் அமைக்கப்பட்டுள்ளது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!