குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை மூத்த பிள்ளையாகக் கொண்டுள்ள ஒரு சுமங்கலிப் பெண்ணால் இறைவனின் சந்நிதியில் வைத்து உணவூட்டப்படுகின்றது. சோறூட்டலில் சர்க்கரை, அரிசி, கற்கண்டு, நெய் கொண்டு அமுது ஆக்கி குழந்தைக்கு ஊட்டுவர். இதில் போசணைப் பொருட்கள் உள்ளமையாலும் முதல் உணவாகையாலும் அதனை தங்க மோதிரத்தால் ஊட்டும் நம்பிக்கை உண்டு.