மாவைக் கந்தன் ஆடி அமாவாசை தினமன்று கீரிமலைக்கு எழுந்தருளி தீர்த்தமாடிய பின்னர் மாட்டுவண்டிலில் கீரமலையிலிருந்து மாவிட்டபுரம் வரை வீதியுலா வருவது வழக்கம். இதற்கென திருவாளர் குணராஜசிங்கம் அல்லது சவாரிப்பெரியண்ணா என அழைக்கப்படுபவரால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மாட்டு வண்டிலில் முருகப்பெருமானை திருவீதியுலா அழைத்து வருவர்.