1958.03.18 ஆம் நாள் அக்கரைப்பற்று என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கிழக்கு என்ற இடத்தில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த மாணவனாகத் திகழ்ந்த இவர் விளையாட்டுத்துறையில் அளப்பெரிய சாதனைகள் செய்தவர். உதைபந்தாட்டம், ஹொக்கி, துடுப்பாட்டம், தடகளம் என எல்லாவற்றிலும் தேசிய அளவிலும் மாவட்ட அளவிலும் பிரகாசித்தவர். 2008.02.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.