1934.02.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை என்ற இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளராகவும், நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.உதைபந்தாட்ட நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் வல்லவர். இவரது சேவையின் மூலம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி உதைபந்தாட்டத்துறையில் அகில இலங்கை ரீதியில் உதைபந்தாட்டச் சம்பியனாக வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது. 1992.11.06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.