1931ஆம் ஆண்டு அளவெட்டியில் பிறந்தவர். நாதஸ்வர இசையுலகின் திலகமாகத் திகழும் இவர் மிக இளம் வயதில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தவர். தனது தந்தையை முதற் குருவாகக் கொண்டு நாதஸ்வரக்கலையைப் பயில ஆரம்பித்தவர். அக்காலத்தில் சாஸ்திரிய சங்கீத விற்பன்னர் என மதிக்கப்பட்ட எம். பி. திருநாவுக்கரசு பிள்ளையை பிரதம குருவாகக்கொண்டு நாதஸ்வர இசைப் பயிற்சி பெற்றவர். கேள்வி ஞானமும், தொடர்ச்சியான கடின பயிற்சியும் விடாமுயற்சியும் இவர் தனக்கென ஒருபாணியை உருவாக்க முடிந்தது. மிக இளவயதிலேயே தனக்கென ஒரு இளம் இசைக்குழுவை உருவாக்க எண்ணி எம்.பி.பாலகிருஸ்ணன், வி.தட்சணாமூர்த்தி, எம்.குமரகுரு முதலியவர் களை இணைத்து 1950ஆம் ஆண்டு நாதஸ்வர தவிற்குழு ஒன்றை அமைத்தார். இலங்கை மட்டுமன்றி உலகமெங்கும் இசைக் கச்சேரி செய்யும் பயணத்தை ஆரம்பித்து வைத்தவர். இவரது பன்நாட்டு இசைப் பயணம் தமிழர் வாழும் நாடுகளுக்கும் தொடர்ந்தது. இவரது புதல்வனாகிய அமரர் முரளிதரன் இளம் வயதிலேயே மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞராகத் திகழ்ந்தவர். வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லைக் கந்தன் ஆலயத்தில் 47வருடங்கள் ஆஸ்த்தான வித்துவானாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டிலும், மேற்குலக நாடுகளில் பிரபலமான கலைக்கூடங்களில் ஒன்றான பிரிட்டன் றுநளவ ஆinளைவநச ர்யடட இலும் நாதஸ்வரம் வாசித்த பெருமைக்குரியவர். இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கொங்கொங்,ஜேர்மன், பிரான்ஸ், கனடா, லண்டன் முதலான நாடுகளிலும் நாதஸ்வரம் வாசித்துப் புகழ்பெற்றவர். சோலோ என்று அழைக்கப்படுகின்ற பல வாத்தியங்களை ஒன்றிணைத்து நிகழ்த்தப்படுகின்ற கச்சேரிகளில் நாதஸ்வரம் வாசித்தவர் என்பதுடன், பரதநாட்டியக் கலையின் அணிசெய் வாத்தியக் கருவிகளில் ஒன்றாக நாதஸ்வரத்தினை உபயோகித்த பெருமையையும் பெற்றவர். என்.கே. பத்மநாதன் அவர்களின் நாதஸ்வர வாசிப்பானது ஸ்வரசுத்தமும், இலய சுத்தமும், விவகாரமும், பிரகாசங்கதிகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாக அமைந் திருக்குமென அன்பர்களாலும், ரசிகர்களாலும் வியந்து பேசப்பட்டமை கண்கூடு. கோயில் கிரியைகளிலும், சடங்குகளிலும், கச்சேரிகளிலும் சரி உருப்படிகளையும், இராகங்களையும் முறைப்படி வாசிக்கின்ற பழக்கமுடையவர். இவரது இசைக்கலைப் பணியைப் பாராட்டும் நோக்கில் இசைப்பிரியர்களால் பல உயரிய சமூக நிறுவனங்களால் கௌரவிக்கப்பெற்றவர். அந்தவகையில் நாதஸ்வரக் கலாநிதி, இன்னிசைவேந்தன், 1964 இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் நாதஸ்வர கானகலாநிதி, 1967 இல் எச்.டபிள்யூ. தம்பையா அவர்களால் ஏழிசைவேந்து, கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தால் கலைமாமணி போன்றனவும், 2004 இல் யாழ். பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி என்ற பட்டமும் 1982 இல் இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி, இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூ~ணம் போன்ற உயர் விருதுகள் வழங்கப்பெற்றவர். 2003 ஆம் ஆண்டு கலையுலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார்.