1909.08.16 ஆம் நாள் வடமராட்சி,தொண்டைமானாறு என்னும் இடத்தில் பிறந்தவர். பொறியியலாள ரான இவர் விவசாய ஆராய்ச்சிப் பணியில் கடமையாற்றியவர். இவருடைய மனதில் நீண்டகாலம் பதிற்திருந்த சிந்தனையான பாக்கு நீரினையை நீந்திக் கடந்து உலக சாதனையை முதற்தடைவ யில் தோல்வியடைந்து மீண்டும் தனது விடாமுயற்சியினால் 1954.03.25 ஆம் நாள் பி.ப4.10 மணிக்கு பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் உலக சாதனையை நிலைநாட்டுவதற்காக வல்வெட்டித்துறைக் கடலில் கால் வைத்தார். 51 கி.மீ.தூரத்தினை 27 மணித்தியாலங்களில் நீந்திக் கடந்து சாதனை புரிந்து தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்தார். இத்தகைய துணிச்சலான உலக சாதனையைப் பாராட்டி அப்போதைய யாழ்ப்பாண நகரபிதா அவர்களால் தங்கப் பதக்கமும், சங்கிலியும், பிரதமர் ஜோன் கொத்தலாவல அவர்களால் வெள்ளிக் கேடயமும் பரிசளித்துக் கௌரவிக்கப்பெற்றவர். சாகசக்குமரன், நவயுகமாருதி போன்ற விருதுகளால் போற்றப்பட்ட இவர் 1960.06.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.