Sunday, October 27

தட்சணாமூர்த்தி, விஸ்வலிங்கம்

0

1933.08.26 ஆம் நாள் இணுவிலில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ஞானபண்டிதன் என்பதாகும். ஆறாவது வயதில் தனது தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்தவர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை காமாட்சிசுந்தரம் என்பவரிடம் விரிவாகவும், நுணுக்கமாகவும் பயின்று அரங்குகளில் வாசித்து வந்தார். சிறுவயதிலேயே இவரது தவில் வாசிப்பா னது யாவரும் பிரமிக்கும்படியாகவும், நாதசுகமுள்ளதாகவும், லயவேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மேலும் இந்தியப்பெருங் கலைஞரான நாச்சியார்கோயில், ராகவப் பிள்ளையிடம் இலயசம்பந்தமான நுணுக்கங்களைப் பயின்றது மட்டுமல்லாமல், அவருடன் சேர்ந்து தவில் வாசிக் கும் பேற்றையும் பெற்றவர். மேலும் இந்திய நாதஸ்வர வித்துவான்களான காரைக்குறிச்சி அருணா சலம், ஸேக்சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஸ்ணன், ரீ.என்.இராஜரத்தினம்பிள்ளை போன்ற வர்களது கச்சேரிகளில் வாசித்துப் பாராட்டுக்களையும், தங்கப்பதக்கங்களையும் பெற்றவர். ஈழத்திலும் இவருடன் இணைந்து எஸ்.பீ.எம். திருநாவுக்கரசு, பி.எஸ்.ஆறுமுகம், சாவகச்சேரி எம்.பஞ்சாபிகேசன் போன்றவர்கள் கானமழை பொழிந்தமையை இசையுலகம் எளிதில் மறந்துவிட முடியாது. ஸேக்சின்னமௌலானாவின் கச்சேரியில் தவில் வாசித்து இந்திய சங்கீத விமர்சகரான சுப்புடுஅவர்களின் பாராட்டையும், தங்கக்கோபுரத்தையும் பரிசாகப் பெற்றவர். இவரது தவில் வாசிப்பினை கலாரசிகர்கள் எவறெஸ்ட்றொக்கற் எனவும் வியந்து பாராட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்திய நாதஸ்வரச் சக்கரவர்த்தியான திருவாவடு ராயரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவுவிழா கரூரில் 12.12.1968 இல் நடைபெற்றது. அவ்விழாவில் தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு தங்கத்தாலான தவிற்கேடயம் பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரது இத்தகைய கலைச் சேவைகளைப் பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகளும், கௌரவப் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில் லயஞானகுபேரபூபதி, கற்பனைச் சுரங்கம், கரவேகசேகரி, தவில்வாத்திய ஏகச்சக்கராதிபதி போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சிறப்புக்குரியது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்து கச்சேரி செய்து சாதனை படைத்தவர்.இவர் தனது புதல்வர்களில் இருவரை தவிற் கலையில் நிலைத்து நிற்கும் சாதனையாளர்களாக உருவாக்கியவர். இவர்களில் திரு.உதயசங்கர வர்கள் தந்தை வழியில் நின்று, இன்று முன்னணிக் கலைஞராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தனது வாழ்நாள்களின் பின்பகுதியை இந்தியாவிலேயே செலவிட்டுக் கலைத்தொண்டாற்றி ஈழத்திற்குப் பெருமை சேர்த்தவர். இவரது தவில் வாசிப்பின் பெருமையினால் யாழ்ப்பாணம் இன்றும் இந்தியாவின் கலைப்பாரம்பரியத்தை மிஞ்சுமளவிற்குப் பெருமை கொண்டுள்ளது எனக் கூறின் அது மிகையாகாது. 1970 களின் பின்னர் மீண்டும் இலங்கை வந்து நம் நாட்டில் தவிலிசை பரப்பிய தவில் மேதை. 1975.03.13 ஆம் நாள் நாதப்பிரம்மத்தோடு ஒன்றி கலையுலக வாழ்வை நீத்துக்கொண்டார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!