1895 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்து யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் வாழ்ந்தவர். வயலின் இசைக் கலைஞர். தனது பதினோராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச்செய்ய ஆரம்பித்தவர். வாய்ப்பாட்டுக் கலையுடன் வீணை, சாரங்கி, நாதஸ்வரம் போன்ற பல வாத்தியங் களையும் வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். இன்றைய மனோகரா திரையரங்கு அமைந்திருக்கும் காணியில் அன்றைய காலத்தில் நாடகக் கொட்டகை அமைத்து பார்சி நாடகங்கள் பலவற்றினை தமிழக நாடகக்குழுக்களை வரவழைத்து நடத்தி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1955 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.