1942.01.01 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்து சுன்னாகம், சூறாவத்தை என்னுமிடத்தில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு நாடகக் கலையின் ஊடாக கலைத்துறையில் பிரவேசித்தவர். மனக்கோட்டை, சுடுதண்ணீர்க் கிணறு, பூஞ்சோலை, லட்சாதிபதி போன்ற நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி நடித்தவர்.நடிகமணி வீ.வீ.வைரமுத்து அவர்களிடம் 1968 ஆம் ஆண்டு ஆர்மோனியத்தினையும், நல்லூர் சித்திவிநாயகம் என்ற வயலின் கலைஞரிடம் வயலினையும் கற்று மிகச்சிறந்த வயலின் வித்துவானாகவும் எக்கோடியன், ஓர்கன் வித்துவானாகவும் திகழ்ந்ததுடன் ஈழத்தின் தலைசிறந்த வாய்ப்பாட்டிசைக் கலைஞர்களது இசைக் கச்சேரிகளில் வயலின் கலைஞனாக இசை வழங்கியவர். இலங்கை வானொலியின் சிறந்த வயலின் இசைக் கலைஞனாகவும் திகழ்ந்த இவர் இசைக்கவிஞன், மரபுக் கலைச்சுடர், கானாமிர்தன், ஞானஏந்தல், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் ஆகிய விருதுகள் வழங்கப்பெற்றுப் பாராட்டப்பெற்றவர்.