Sunday, February 2

குருசாமி, வல்லிபுரம்

0

1922.12.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வீமன்காமம் என்ற இடத்தில் பிறந்தவர். தென்னிந்தியாவிலிருந்து தொழில் நிமித்தமாக காங்கேசன்துறைக்கு வருகை தந்த கேசவன் என்னும் மரபுவழி ஆட்டக் கலைஞனிடமிருந்து இவர் இக்கலை வடிவத்தினைக் கற்றுக் கொண்டதாக அறியமுடிகின்றது. 1945 ஆம் ஆண்டு முதல் வசந்தனாட்டம், ஒயிலாட்டம் ஆகிய இருகலைகளையும் வீமன்காமம் கேணியடி வைரவர் ஆலய முன்றலில் அரங்கேற்றி வந்தவர். இக்கலை வடிவத்திற்கான பாடல்களை இயற்றியவரான விசுவப்புலவர் மரபில் வந்த முருகேசு என்பவரது மகளைத் திருமணம் செய்த வகையால் மயிலிட்டி தெற்கு கட்டுவன் கிராமத்தவராக மாறியது மட்டுமல்லாமல் இவ்வூரவர்களையும் இக்கலைவடிவத்தில் இணைத்து மேலும் பலருக்கும் பழக்கி வந்தார். இவருடன் திரு.சோமநாதன், திரு. நடேசன், திரு.இராசையா, திரு.சின்னப்பு, திரு.நவரத்தினம் போன்ற பல கலைஞர்கள் இணைந்து ஆடி வந்துள்ளனர். 1960 ஆம் ஆண்டிலிருந்து மயிலிட்டி தெற்கு வீரபத்திரர் ஆலயத்தில் அரங்கேற்றி ஆடி வந்துள்ளனர். இக்கலை வடிவத்தினை இவரிடம் பயின்றவர்களாக த. பாலகிருஸ்ணன், த.கண்ணபிரான், து.கிருஸ்ணமூர்த்தி, த.லோயுதன், த.கேதீஸ்வரன், க.வ.கனகேந்திரன் என்பவர்களும் இளந்தலைமுறையினரான சி.ஜெயகரன், இ.சோதிகுமார், த.தவராசா, ப.சுரேஸ்குமார், த.சிவா என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தனது புதல்வர்களில் சுகுமாரை ஒயிலாட்ட, வசந்தனாட்ட முறைகளையும், பாடலையும் பயிற்றுவித்ததுடன் மூத்த புதல்வனான ஸ்ரீதரனை மத்தளம் வாசிப்பதனையும் தனது மைத்துனரான மு.சிவப்பிரகாசத்திற்கு பாடலையும் கற்றுக்கொடுத்து தனது கலைத்தொடர்ச்சியினையும் ஏற்படுத்தியவர். இவரது இத்தகைய கலைச்சேவைகளைப் பாராட்டி பராம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் தங்கப் பதக்கம் வழங்கியும், வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினர் கலைச்சுடர் விருதினையும் வழங்கி கௌரவிக்கப் பெற்றவர். 2004.11.27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!