தமிழர்கள் வாழ்வில் உணவுப்பழக்கங்கள் மருத்துவமுறையோடு ஒன்றியிருந்நது. மண்ணால் தயாரிக்கப்பட்ட சட்டிகளில் கறிசமைத்து உண்பது வழக்கம். உணவுகள் வெிரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்கும் உருசியாக இருப்பதற்கும் இச்சட்டிகள் பெருந்துணை புரிகின்றன. வித காலங்களில் தூய்மைத்தன்மைக்காக இச்சட்டிகள் உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆடிஅமாவாசை, புரட்டாதிச்சனீஸ் வரன்,சித்திரைப்பறுவம் போன்ற முக்கிய விதர தினங்களில் இவற்றின் பயன்பாடுகள் அதிகமாகக் காணப்பட்டு வருவதனை அவதானிக்கலாம். தற்காலத்தில் வேறுவகையான உலோகப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்தமையால் இச்சட்டி வகைகளின் உற்பத்தி குறைவடைந்தது மட்டுமல்லாது இதனையே தொழிலாக மேற்கொண்டு வந்தவர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலைமையும் உருவாகியுள்ளது.