1911.10.11 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர், வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், ஆர்மோனியம், நாதஸ்வரம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் உடையவராக விளங்கினாலும் வயலின் இசைக் கலையிலேயே மிகவும் ஈடுபாடும் திறமையும் கொண்டவர். வயலின் இசைக்கலைஞர்கள் பலரையும் உருவாக்கி தனது கலைத்தொடர்ச் சியினையும் ஏற்படுத்தியவர். 1938.03.21 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.