யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீரமாணிக்கதேவன்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் பாய்க்கப்பல் மூலம் இந்தியாவிற்குச் சென்று உடற்பயிற்சி, உடல்வித்தைகள், மல்யுத்தம், யோகாசனம், நீச்சல், போர்க்கருவிப் பாவனை, சித்தமருத்துவம், மாந்திரிகம், சாத்திரம் போன்ற பல கலைகளைக்கற்று மீளவும் இலங்கை வந்த இவர் காங்கேசன்துறை மயிலிட்டி வீர மாணிக்கதேவன்துறை என்ற இடத்திலுள்ள தனது இல்லத்தில் இராமமூர்த்தி உடற்பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் கோதா அமைத்து மல்யுத்தம், தற்காப்புக் கலை, உடற் பயிற்சி, யோகாசனம் போன்ற கலைகளைப் பயிற்றுவித்து வந்தார். இவரது கலையாற்றலினாலும், அறிவினாலும், அனுபவத்தினாலும் இவரை எல்லோரும் பயில்வான் தம்பு எனவும் பயில்வான் இரத்தினம் எனவும் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.