Thursday, May 30

அம்பலவாணர். வீ.

0

மிருதங்கம் அம்பலவாணர் அவர்கள் வீணாகானபுரம் என்னும் யாழ்ப்பாணத்தின் வண்ணார் பண்ணை நாச்சிமார் கோவிலடியில் 1927.10.11 ஆம் நாள் வேலுப்பிள்ளைப் பக்தர், செல்லம்மா தம்பதிகளுக்குப் புத்திரராகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் மூவர். அவர்களுள் ஒருவர் கணேசு என்பவராவர். மற்றைய இருவரும் பெண்களாவார்.

அம்பலவாணர் அவர்கள் சிறுபராயத்தில் யாழ் இந்துக் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றார். கல்வி பயிலும் காலத்தே தமது மரபுத் தொழிலாகிய பொன்னாபரணம் தயாரிக்கும் தொழிலையும் திறம்படச் செய்து வந்தார். இக்காலத்தில் இவர் தந்தையார் காலமானார். அப்போது வாணர் அவர்களுக்கு வயது 11ஆக இருந்தது. இவருக்கு குடும்பப் பொறுப்பு ஏற்படவும் தனது பொன்னாபரணம் தயாரிக்கும் தொழிலின் உதவியால் ஓரளவு சமாளித்துக் கொண்டார். இவர் வாழ்ந்த சூழல் இசை ரசிக ஞானமுடையதாக இருந்தமையினால் வாணர் அவர்கள் மிருதங்க இசையில் நாட்டம் கொண்டவராய் ஆவரங்கால் பொன்னுச்சாமி என்பவரிடம் தனது 20ஆவது வயதில் மிருதங்கக் கல்வியை ஆரம்பித்துப் பயின்றார். தொடர்ந்து யாழ் வண்ணையில் மிருதங்க வித்துவானாகவும், மிருதங்கம் தயார் செய்யும் வேலையிலும் இந்திய நாட்டுக் கலைஞர் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் மிருதங்கம் பயின்றார். அதன் பின்னர் பல்லிய வித்வான் சுப்பையாபிள்ளை அவர்களிடமும் மிருதங்கம் பயின்றார்.

இவருடைய வார்த்தையின் இங்கிதங்கள் யாவருடனும் நல்லெண்ண உறவுகளை ஏற்படுத்தியது தனது கலையையும் சிறிது சிறிதாக விருத்தி செய்தார். யாழ்ப்பாணத்தில் சில பாடகர்களுக்கு மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார் மேலும் 1949ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்திற்கு நாட்டியக் கலைக்கூடத்திற்கு மிருதங்க ஆசிரியராக வந்த சிதம்பரம் ஏ.எஸ்.ராமநாதன் அவர்களிடமும் மிருதங்கத்தை ஐயம் திரிபறக் கற்றார். இவருடைய குருபக்தி, நற்பண்புகள், இறையருள், குருவருள் என்பன இவரை மிருதங்கக் கலையில் ஓர் உன்னத நிலை எய்தும் அளவுக்கு ஆக்கியது இவருடைய மிருதங்க வாசிப்பு எப்போதும் நல்லமாதிரியாக அமையும். டோகாக்கள், தொப்பிசும், சர்வலகு என்பன ஜனரஞ்சகமானவை இவருடைய மிருதங்க வாசிப்பு பாட்டுகளுக்கு மிக மிகப் பொருத்தமானது என்றே கூறலாம். பாடல்களைக் குறைவில்லாத அளவுக்கு மெருகூட்டக் கூடிய வாசிப்பு. அதாவது சொகசுகா மிருதங்க தாளம் என்ற அளவிற்கு இருவர் சேவையிலிருந்து இவ் வாசிப்பு எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. வலந்தலை, தொப்பி என்பவற்றின் சமநிலை போற்றக்கூடிய ஓர் விடயமாக அமைந்தது.

கச்சேரிகளுக்கு சிலவேளைகளில் குறிப்பிட்ட பக்கவாத்தியக்காரர்கள் வர இயலாத சந்தர்ப்பங்களில் பாடகர்களோ அல்லது இசையரங்கு ஏற்பாடு செய்தவர்களோ கேட்டால் எவ்வித மறுப்புமின்றி மிருதங்கம் வாசித்துக் கச்சேரியை நிறைவு செய்யும் நற்பண்புடையவர். எந்த ஒரு மிருதங்க வித்துவானுக்கும் மிருதங்கம், குறிப்பிட்டதேவைக்கு இரவல் கேட்டாற் கூட நல்ல மனத்துடன் வாத்தியம் தந்து உதவுவார். கலை சம்மந்தமான விடயங்களில் மற்றைய கலைஞர்களுடன் ,சைந்து செயற்படும் தன்மையுடையவர். இசைபற்றி ஏதாவது ஆலோசனைகள் முன் வைத்தால் கலந்து பகிர்ந்து செய்வோம்” என்னும் வார்த்தையைக் கூறி யாவரையும் அணைத்துக் கொள்வார் வித்தைச் செருக்கு இல்லாத இன்மொழி பேசும் இசைக்கலைஞர்.

அம்பலவாணர் அவர்கள் தனது 26ஆவது வயதில் 1953,ல் மகளான காமாட்சி நான்கு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் கலைப் என்பவரைப் திருமணம் முடித்து இல்லறம் நடத்தினார். இவருக்கு பயிர்களாகப் பிறந்தார்கள். இவர்கள் யாவரும் கல்லூரிப் படிப்புடன், இசைக்கல்வியும் பயின்றார். அவர்களுள் மூத்த மகன் ரகுநாதன் சிறந்த மிருதங்க வித்துவானாகக் கலைச் சேவையை யாழ்ப்பாணத்தில் செய்கிறார் ஸ்ரீ நிவாசன் மிருதங்கம், கடம், முகர்சிங் போன்ற வாத்தியங்களினூடாக இலண்டன் சரஸ்வதி இசைக்கல்லூhயில் இசை பரப்பிக்  கொண்டிருக்கிறார். பெண்கள் இருவரும் இராமச்சந்திரன் என்ற புதல்வரும் வாய்ப்பாட்டுக் கலையை நன்கு விருத்தி செய்து கொண்டு தமக்கென மாணவர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது வாணர் அவர்கள் செய்த நற்றவப் பயன் என்று கூறலாம்.

அம்பலவாணர் அவர்கள் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் எம்.கே.தியாகராஜபாகவதர் ஞாபகார்த்தமாக இசை விழாவை பல ஆண்டுகள் முன்னின்று நடத்தியதுடன், இசை விற்பன்னர் யாவர்களினதும் கச்சேரிகளுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார் குறிப்பாக 1969ஆம் ஆண்டு இந்தியத் தமிழ்நாட்டு வித்வான் கடைய நல்லூர் மஜீத் அவர்களின் திருப்புகழ் இசையரங்குகளிற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல ,டங்களிலும் மிருதங்கம் வாசித்துப் பெரும் புகழ்பெற்றார். வாணர் அவர்களுடன் அனேகமாக யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ எஸ்.சர்வேஸ்வர சர்மா அவர்களே வயலின் வாசித்துள்ளார். திரு. அம்பலவாணர் இலங்கை வானொலிக் கலைஞராகவும் சேவை புரிந்துள்ளார். மேலும் யாழ். ரசிக ரஞ்சன சபாவில் 28 ஆண்டுகள் மிருதங்க ஆசிரியராகப் பணி புரிந்தும், தனது வீட்டில் வகுப்புக்கள் நடத்தியும் பல மிருதங்க மாணவர்களைத் தயார் செய்து இசைக்கலைச் சேவை புரிந்துள்ளார். இவர்களில் மாணவர் பரம்பரையினருள் குறிப்பிடும் படியாக இவருடைய மகன் ரகுநாதன் அவர்களைக் கூறலாம் மற்றும் இவருடைய மாணவர்கள் பலர் இன்றும் வாணர் அவர்களின் மிருதங்க இசைப் பரம்பரையை உருவாக்கி வருகிறார்கள்.

மிருதங்க இசைக் கலையை பணியாற்றிய அம்பலவாணர் அவர்கள் மார்பு நோயினால் மிருதங்க வாத்திய வாசிப்பிலிருந்து ஓய்வு பெற்று, பொதுநலத்தொண்டுகளில் சபையின் பங்கேற்று சேவை புரிந்த நம் கலைஞர் 1981.07.19 ஆம் நாள் தனது கலை வாழ்வை விடுத்து நிலையுலக வாழ்விற்குச் சென்றார். அமரருடைய இசைச் சேவையானது இவருடைய வாரிசுகள் ஊடாக தொடருகிறது என்பதில் ஐயமில்லை.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!