1931.08.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆடற்கலை விரிவுரையாளராகவும், இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் ஆடற்கலை வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பாடலாசிரியராகவும் ஆடற் கலைஞனா கவும் வாழ்ந்தவர். “கற்பகவல்லியின் பொற்பதங்கள் பிடித்து” என்ற பாடல் இவரது கவித்திறனை எடுத்துக்காட்டும் சான்றாகும். எண்ணற்ற நாட்டிய நாடகப்பிரதிகளை எழுதியவர். இவரால் எழுதப் பெற்ற “திருக்குற்றாலக்குறவஞ்சி” என்ற நாட்டிய நாடகப்பிரதியினை வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நூலாக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இவருடைய கலைப் பணிகளுக்காக ஸாகித்தியஸாகரம், ஸாகித்திய மாமணி, சங்கீதவித்வஸாகரம், ஸாகித்ய சிரோன் மணி, ஆசுகவி, மதுரகவி, இயலிசைவாரிதி, முத்தமிழ் வித்தகர் ,ஸம்வா தீஸ்வரர், சிரு~;டி ஞாயிறு, கவிமாமணி, ஞானக்கவிமணி, அருட்கலை வாரிதி, அருட்கவிச்செம்மல், முத்தமிழ் வாரிதி, சங்கீத வித்வஸாகரம், கலாரத்னா, கலாபூஷணம், முத்தமிழ்க்கலாநிதி, முத்தமிழ்ச்சுரபி, மகாவித்துவான் போன்ற விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டவர். 2003.10.07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.