Sunday, October 27

பரமானந்தர், பொன்

0

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை குரும்பசிட்டி என்னும் இடத்தில் 1879.12.09 ஆம் நாள் பிறந்தவர். தனது கிராமத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயத்தின் ஸ்தாபகராவார். இக்கிராமத்தில் கயிற்றுக் கோலாட்டம் என்ற நுட்பமான கலையை அறிமுகப்படுத்தியவர். அண்ணாவி கந்தப்பிள்ளை என்பவரது துணையோடு பன்னிரண்டு ஆண்பிள்ளைகளைத் தெரிவுசெய்து நெறிப்படுத்தி இக்கயிற்றுக் கோலாட்டத்தினை அரங்கேற்றியவர். அதற்கேற்ற பாடல்களையும் இவரே இயற்றியுள்ளார். இக் கோலாட்ட ஆட்டமுறையானது உறி, கூடை, சங்கிலி, அரைஞான் கயிறு போன்ற பொருட்களை கோலாட்டம் அடித்துப் பின்னுவது ஆகும். பல வருடங்களாக இவ்வாடற்கலையினை அரங்கேற்றி வந்தவர். இவரது வழியைப் பின்பற்றியே தாளக்காவடி என்னும் கலைவடிவம் குரும்பசிட்டியில் வளர்ந்ததென்பர்.குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் ஆசிரியர் திருவாதவூரடிகள் புராணத்திற்குப் பயன்சொல்லி வந்தவர். கவிதை இயற்றும் ஆற்றல் பெற்ற இவர் அக்கால வழக்கப்படி பல சமரகவிகளைப் பாடினார். குரும்பசிட்டி மகாதேவ வித்தியாலயத்தில் வருடந்தோறும் நடைபெற்று வந்த சங்க விழாக்களில் தருமிக்குப் பொற்கிளி அளித்தமை, குமனண், பிரகலாதன் முதலிய புராண இலக்கிய நாடகங்களையும் அரங்கேற்றியவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்குமுகமாக குரும்பசிட்டி வாழ்மக்களால் தமது பாடசாலைக்கு பொன் பரமானந்தர் வித்தியாலயம் என்றும் ஒரு வீதிக்கு இவரது பெயரைச்சூட்டியும் நன்றிக்கடன் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!