Sunday, October 27

இரத்தினம், இரா

0

1916.08.17 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்த இவர் இலண்டன் கலைமாணிப் பட்டம் பெற்றவர். தமிழ், இலக்கண, இலக்கித்துறைகளில் சிறப்புற்று விளங்கிய இவர் ஆஙகிலத்திலும் தமிழிலும் சிறந்த மொழிப் புலமையுடையவராகத் திகழ்ந்தார். இதன் காரணமாக அரச திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பல ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். நாடகம், நாட்டியநாடகம், மொழிபெயர்ப்புக் கலைகளில் தனது உச்சத்திற மையை வெளிப்படுத்தியுள்ளார். நாடகத்துறையிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் இப்புலமைக்குச் சான்றாக இவரால் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க நாடக ஆசிரியர் சொபொக்கிளிஸ் எழுதிய ஈடிப்பஸ் மன்னன் நாடகத்தினை தமிழில் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1981.03.21 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!