இந்துக்களின் வாழ்வில் தூண்டாமணி விளக்கு என்பது மிகவும் இன்றியமையாததொன்றாகும். இதில் பல வகை விளக்குகள் காணப்படுகின்றன. விளக்கின் குண்டான பகுதியில் எண்ணெய்யை ஊற்றி அதன் வாயினை இறுக்குகின்ற போது துவாரத்தினூடாக எண்ணெய் சிறிது சிறிதாக வடிந்து விளக்கின் சுடரானது தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் வல்லமையை வழங்குவது இதன் முக்கியத்துவமாகும்.
