1938-06-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். ஒப்பனை, ஓவியக் கலை வெளிப்பாடுகளில்நாடகக்கலையுலகில் சாதனைகள் புரிந்தவர். கூத்து மட்டுமல்லாமல், வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள் எனப் பல நாடகங்களுக்கு முக ஒப்பனை மற்றும் வேட உடுப்புக்கள், நாடகத்திற்கான பக்கத்தி உரைகள், சீன்,தட்டிகள் என்பவற்றினை அழகுற அமைத்து பொருத்தமான காட்சிப் பின்னணிகளை அரங்கினில் கொண்டு வந்த தொழில்முறை சார்ந்த அரங்கப் பின்னணியில் நின்று வியாக்கியானிக்கும் கலைஞனாவார். இப்பணிக்காக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றவர். 2005-05-01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.