யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சிந்துபுரம் என்ற இடத்தில் 1925.10.24 ஆம் நாள் பிறந்தவர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழுவின் தலைவராகப் பலகாலம் செயற்பட்டு கூத்தின் தாளம், ஆடல், பாடல் ஆகியவற்றினைப் பலருக்கும் பயிற்சியளித்தது மட்டுமல்லாமல் பண்டைய காலத்தில் ஆடப்பட்டுவந்த அரிய பெரியகூத்து நூல்களைப் பேணிப்பாதுகாத்து வந்தவர். சைவத் தமிழறிஞராகவும் பௌராணிகராகவும் இருந்த இவரால் நெறிப்படுத்தப்பட்ட வடமோடி சார்ந்த கூத்துக்கள் இவருடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளன. இவரது பணிகளைக் கௌரவிக்கும் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களம் “கலாபூ~ணம்” விருதினை வழங்கிப் பெருமைப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
2 Comments
காலத்தின் தேவை கருதி மிகவும் தேவையான ஓர் முயற்சி இது மேலும் வளர வாழ்த்துகிறேன்
நன்றி