1933-12-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். முருகேசு தியாகராசா என்பது இவரது இயற்பெயர். ஓசீலா, மிஸ்சா? மிசிஸ்சா? தெரியலே, அடுத்த வீட்டுக்கல்யாணிக்குக்கல்யாணம் போன்ற பொப்பிசைப் பாடல்கள் மூலம் உலகமறிந்த பொப்பி சைக் கலைஞனாவார.; பக்திப்பாடல்கள் பாடுதல், நாடகங்களுக்கான ஒப்பனை ஆகியனவும் இவரது பிற கலைச்செயற்பாடுகளாகும். இருப்பினும் வண்ணைக் கலைவாணர் நாடகமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட நாடகங்கள், யாழ்ப்பாணத்து நாடகமன்றங்களால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுக்கும் மிகத் தரமான ஒப்பனை செய்து நாடகப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். ஒப்பனைக்கலைக்காகவே பல தரப்பினராலும் பாராட்டப் பெற்றவர். 1983-06-17ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.