1935_07_24 ஆம் நாள் யாழ்ப்பாணம் குருநகர் றெக்கிளமேசன் என்ற இடத்தில்பிறந்தவர். தனது பதினெட்டாவது வயதிலிருந்து கூத்து கலை மீது நாட்டங்கொண்டு ஈடுபடத் தொடங்கினார். அன்றிலிருந்து இறக்கும்வரை கூத்துக் கலைக்காக தனது வாழ்நாளில் பெரும் பகுதியினை செலவிட்ட ஸ்திரிபார்ட் கலைஞனாவார். பொதுவாக கூத்துக்களில் பெண் பாத்திரங்களையேற்று நடிப்பதற்கு கலைஞர்கள் பின்நின்ற காலத்தில் துணிந்து மேடையில் பெண்பாத்திரமேற்று நடித்து பெண் பாத்திர சித்தரிப்பில் தனி முத்திரை பதித்தவர். இவர் எலிசபெத்தம்மாள், பாலசூரன்,கண்டியரசன், எஸ்தாக்கியார்,கற்பலங்காரி,ஞானசௌந்தரி, மத்தேயு மவுறம்மா, செபஸ்தியார், நொண்டி, கருங்குயில் குன்றத்து கொலை மற்றும் விஜயமனோகரன் போன்ற கூத்துக்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் குருநகரைசேர்ந்த அண்ணாவியார் மரியதாஸ் மற்றும் காலஞ் சென்ற அண்ணாவிமார்களான பாசையூரை சேர்ந்த பாலதாஸ், யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த சின்னக்கிளி, நாவாந்துறை வின்சன் டீ போல், கொழும்புத்துறை ஜோசவ் திரேசம்மா போன்றவர்களின் நெறிப்படுதத்தலில் பல கூத்துக்களில் நடித்தது மட்டுமல்லாது இவர்களது நன்மதிப்பினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் குருநகர்,பாசையூர்,நாவாந்துறை மற்றும் பலாலி ஆகிய இடங்களில் மேடையேற்றிய கூத்துக்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1993_08_30 ஆம் நாள் வாழ்வுலகைவிட்டு நிலையுலகம் சென்றார்.