1938-08-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்த இவர் இலங்கையின் இந்து ஆலயங்களின் தேர்ச் சிற்பக்கலை வடிவமைப்பில் புதிய பரிமாணத்தினை ஏற்படுத்தியவர்.தேர்க்கலை சிற்ப வடிவமைப்புத் தொடர்பில் பல சிற்பக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். இவருடைய கலைச் சிறப்பினைப் பாராட்டும் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் அன்பர்களால் தேர்க்கலையரசு என்ற விருதினையும் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். 2001-05-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.