1923-09-21 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெரு என்ற இடத்தில் பிறந்தவர். 2000 த்திற்கும் மேற்பட்ட ஓவியப்படைப்புக்களுக்குச் சொந்தக்காரர். 1956-1990 ற்குமிடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் காணப்பட்ட முன்னணித் திரையரங்குகளில் திரையிடப்பட்ட திரைப்படங்களுக்கான விளம்பரங்கள், நடிகர்களின் ஓவியங்களை வரைந்து ஓவியக்கலையில் ஓர் திருப்பு முனையினை ஏற்படுத்தியவர். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் என்போரையும் ஆங்கிலத் திரைப்படங்களின் விறுவிறுப்பூட்டும் காட்சிகளையும் அறுபதடி, எண்பதடி, நூறடி உயரங்களில் வரைந்து சாதனை படைத்தவர். இவரது இத்தகைய படைப்புக்களினால் திரையரங்குகள் மூலம் ஓவியக்கலையில் “ஆட்மணியம்” என எல்லோராலும் அழைக்கப்படலானார். இவரது ஓவியக்கலை யாற்றலை உள்நாட்டுப் பத்திரிகைகளும், ரூபவாஹினிக்கூட்டுத்தாபனமும் ஐரோப்பாவில் இயங்கும் தமிழ்ப் பத்திரிகைகளும், தமிழர் தொலைக்காட்சிச் சேவைகளும் தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் பொம்மை சஞ்சிகையும் பேட்டி மூலம் வெளியிட்டும், காட்சிப்படுத்தியும் வந்துள்ளன. மேலும் இம்மண்ணில் பல ஆற்றல் மிக்க கலைஞர்களை உருவாக்கி தன் கலைப்பணி தொடர வழிவகுத்தபெருமைக்குரிய வர். ஓவியச்செல்வன், ஓவியச்சுடர்மணி, பேராசிரியர் கைலாசபதி போன்ற விருதுக ளுடன் 1998 இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூ~ணம், 2005 இல் நல்லூர் கலாசாரப் பேவையின் கலைஞானச் சுடர் விருதினையும் பெற்றவர். 2006 ஆம் ஆண்டுவாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.