யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1946.01.03 ஆம் நாள் பிறந்தவர். சிலோன் விஜயேந்திரன் என்றபெயரில் திரைப்பட நடிகராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் கலையுலகில் பிரகாசித்தவர். இருப்பினும் சமூகத்தை விளங்கிக்கொள்வதற்கு இவர் எடுத்த பரிமாணம் நடிப்பு ஆகும். எழுத்தாளராகவும், நடிகராகவும் ஏக காலத்தில் தொழிற்படும் ஆற்றல் பெற்றிருந்த மிகச்சிறந்த ஆக்க இலக்கியப் புலமையாளர்.இந்திய சினிமாவில் வில்லன் பாத்திரமேற்று நவரசங்களை நடிப்பில் வெளிப்படுத்தி நடிப்புத்துறையில் முத்திரை பதித்தவர். ஈழநாட்டுப் புலவர்கள், பாரதியார், விவேகானந்தர் போன்றோர்களது உபதேசங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர். ஈழத்தின் புகழ்பூத்த கண்டனக் கவிஞன் எனப் போற்றப்படும் கல்லடி வேலுப்பிள்ளை அவர்களது பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2004-08-30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.