Tuesday, June 25

பொன்னம்பலம், கணபதிப்பிள்ளை, கணேசர்

0

1901-11-08 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, முiபௌ ஊழடடநபந ஆகிய கல்லூரிகளில் உயர்தரம் வரை கற்று டுழனெயn பல்கலைக்கழக புலமைப் பரிசில் பெற்று இயற்கை விஞ்ஞான மாணிப்பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்று குற்றவியல் சட்டத்தில் நுணுக்கம் பெற்றவராக – மேதையாகத் திகழ்ந்தார். இவரால் பதிவு செய்யப்பட்ட சுயதெயni வுயஒi ஊரி ஆரனநச என்ற வழக்கே இலங்கையில் கைவிரலடையாளம் பதிவு செய்யப்பட்ட முதலாவது வழக்காகும். 1944-08-29 ஆம் திகதி வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினை ஸ்தாபித்தார்.இக்கட்சியின் ஸ்தாபக தலைவராக செயற்பட்ட இவர் 1934 – 1960 கள் வரை இலங்கையின் பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதுடன் டி.எஸ்.சேனநாயக்கா அவர்கள் பிரதமராகவிருந்த காலத்தில் முரண்பாட்டு அரசியல் மூலம் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட நிலையில் இணக்க அரசியலின் மூலம் கைத்தொழில், கடற்தொழில் அமைச்சராக பதவி வகித்து தமிழ் மக்களுக்கு பல்வேறு சேவைகளையாற்றினார். சிங்களமொழிக்குசமனாக தமிழையும் ஏற்கவைத்தவர்.காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையினையும், பரந்தனில் கோஸ்ரிக்சோடா இரசாயனத் தொழிற்சாலையினையும் வாழைச்சேனையில் கடதாசிதொழிற்சாலையினையும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பனிக்கட்டித் தொழிற்சாலையினையும் நிறுவினார். மேலும் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தினை நிறைவேற்றி கிளிநொச்சியிலும் அதனைச்சார்ந்த இடங்களிலும் குடியேற்றத்திட்டத் தினையும் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பயிற்செய்கை வசதிகளையும் ஏற்படுத்தினார். முதியோர்களைப் பாதுகாப்பதற்காக கைதடியில் வயோதிபர் மடத்தினை ஆரம்பித்தார். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தமது தாய் மொழியில் உரையாற்றுவதற்கு குரல்கொடுத்து முதன்முதலில் தமிழில் உரையாற்றி சரித்திரம் படைத்தார். யாழ்ப்பாணத்திற்கு கொழும்பிலிருந்து மேலதிகமாக ஒரு புகையிரதத்தினை ஒவ்வொருநாளும் ஓடுவதற்கு ஏற்பாடு செய்து வெற்றியும் கண்டார். இப்புகையிரதம் பொன்னம்பலம் ஸ்பெசல் என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். கடற்தொழிலாளர்கள் நவீன இயந்திர படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொடுத்ததோடு மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களை ஆரம்பித்து அதனூடாக மீனவர்களுக்கு கடன் வழங்கும் திட்டங்களையும் அறிமுகம் செய்து வாழ்வாதாரப் பணிகளை முன்னெடுத்துச் சென்ற இவர் 1977-12-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!