1940-04-06 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்த இவர் ஆயர்வேத வைத்தியமுறையில் எல்லா நோய்களுக்கும் வைத்தியம் செய்திருந்தாலும் குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்துவதில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தார். முன்னைய காலங்களில் நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் குழந்தைகளின் இன்னல்களுக்காக இவரை நாடிவந்து வைத்தியம் பெற்றுச் செல்வர். தலைக்கெண்ணெய் வழங்குதல், கிரந்திகளுக்கான எண்ணெய், அவிதல், சொறி, சிரங்கு, வாதம்பித்தம் என அனைத்து நோய்களையும் தனது ஆற்றலால் கட்டுப்படுத்தினார். ஆங்கில வைத்திய முறை எதனையும் உள்வாங்காது முழுவதும் தமிழ் முறையிலான வைத்தியத்தில் கைதேர்ந்த இவர் நாடியினைப் பிடித்துப் பார்த்து நோய்களை இலகுவில் கண்டறிந்து சிகிச்சையளிப்பதே இவருடைய விசேட பண்பாகும். தனது இருபத்திநான்காவது வயதில் இத்துறையை ஆரம்பித்த இவர் எழுபது வயதுவரை இச் சேவையினை வழங்கி வந்தார்.லங்கா ஆயுர்வேதக் கல்லூரியில் பயின்று னு.யு.ஆ பட்டம் பெற்றவர். தற்பொழுது இவருடைய புதல்வன் இச்சேவையினை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 2000-06-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.