அமெரிக்காவில் பிறந்த இவர் யாழ்ப்பாணம்- அளவெட்டி மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் ஆச்சிரமங்களை அமைத்து சைவ சமய ஆன்மீகப்பணிகளுடன் கலை,கலாசார வழிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். அமெரிக்க நடனக் குழுவொன்றுடன் அளவெட்டியில் கலைநிகழ்ச்சிக்காக வருகைதந்திருந்த வேளையில் தவத்திரு யோகர் சுவாமிகளின் பார்வையினால் கட்டுண்ட இவர் தனது நடனக் குழுவை வி;ட்டு நீங்கி சுவாமிகளின் பாதையில்அளவெட்டியிலே தரித்து நின்றார். மீளவும் அமெரிக்கா சென்று அங்கேயே இறைவனடி சேர்ந்தார்.