1928-03-30 ஆம் நாள்யாழ்ப்பாணம் இணுவில் என்னும் ஊரில் பிறந்தவர். சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய கலைத்துறை களில் பல சாதனைகளை ஏற்படுத்தியவர். இவரால் எழுதப்பெற்ற மலையக மக்களின் அவலங் களை மையமாகக்கொண்டு எழுதப்பெற்ற “மலைக்கொழுந்து” என்ற நாவல் இலக்கியத் திற்காக சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. வெளிநாடுகளில் மருத்துவப் பயிற்சிகளில் கலந்து கொண்ட பேராசிரியரவர்கள் நோய்கள் பற்றிய ஆய்வுகள் பலவற்றினை மேற்கொண்டார். அருமைத் தங்கைக்கு, அன்புள்ள நந்தினி,இதயநோயும் தடுப்பு முறைகளும், (மருத்துவ அறிவுரை), ஊர் நம்புமா, கண்களுக்கு அப்பால்,தரிசனம், நந்தியின்கதைகள், நந்தியின் சிறந்த சிறுகதைகள் (சிறுகதைத்தொகுப்பு), உங்களைப்பற்றி(சிறுவர்அறிவுரை), குரங்குகள் (நாடகம்), தங்கச்சியம்மா, நம்பிக்கைகள், மலைக்கொழுந்து (நாவல்) அன்பார்ந்த சாஜி அடியார்களுக்கு, சாயியின் குரலும் வள்ளுவர் குறளும், சத்தியசாயி மனித மேம்பாட்டுக்கல்வி ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட் டுள்ளதுடன் பொன்மணி என்ற ஈழத்து தமிழ்த்திரைப்படத்திலும் குரங்குகள் என்ற நாடகத்திலும் நடித்துள்ளார். இவருடைய கலைத்துறைப் பணிகளை கௌரவிக்கும் நோக்கில் வடக்கு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் விருதும் வழங்கப் பெற்றவர். இவரது குரங்குகள் என்னும் நாடகம் இவருடைய கலைத்துறை ஆற்றலை எடுத்துக்காட்டும் ஆவணமாகும். இந்திய எழுத்தாளரான இராஜாஜி அவர்களால் “நந்தி” என்ற பட்டப்பெயரை வழங்கியமை குறிப்பிடத் தக்கது. 2005-06-04 ஆம் நாள் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்.