யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ80 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் பெரிய கடையில் கஸ்தூரியார் வீதியின் இடது பக்கத்திலுள்ள செம்மாதெருவில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் 1856ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்த சம்மான் (காயல் பட்டினம்) பகுதி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து பதனிடப்பட்ட தோல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்;. இவர்கள் கஸ்தூரியார் வீதியிலே குடியேறியதாகவும் இவர்களுள் முன்பு புதிய சோனகதெரு பள்ளியின் பே~; இமாமாக இருந்த நகீப் மௌலவியின் மூதாதையர்களான காதர் பக்கீர் என்பவரது அப்பாவே தற்போது பள்ளி அமைந்துள்ள காணியை 1868ல் பள்ளிவாசல் கட்டுவதற்கு வழங்கி ஆரம்பத்தில் சிறு கொட்டிலாகவிருந்து தொழுகை நடந்து வந்ததுடன் 1950ற்குப்பின் மேமம் சமூகத்தினர் பள்ளி பரம்பரை வாரிசுகளுடன் இணைந்து பள்ளிவாசலை பெரிய கட்டடமாகவும் தங்கும் (வாடகைக்கு விடும்) அறை வசதிகளையுடைய முன்னேயுள்ள பள்ளிவாசல் காணியில் கடைத்தொகுதியும் வருமானத்திற்காக 1962ல் கட்டப்பட்டது.