புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் கடற்கரையோரமாக கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு எதிராக கிழக்குத் திசையில் முந்நூறுமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் மூலமூர்த்தியாக சிவன் அமர்ந்திருக்கின்றார். வைத்தீஸ்வரன் அம்மை தையல் நாயகியுடன் வீற்றிருந்து அடியவர்க்கு அருள்பாலிக்கின்றார். இலையில் பஞ்சாமிர்தம் வழங்கப்படுவதனால் பஞ்சாமிர்த ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனி உத்தரதினத்தினை நிர்ணய தினமாகக்கொண்டு ஒன்பதுநாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.