யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 87 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் யாழ்ப்பாணம் சின்னக்கடை நல்லூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த முஸ்லிம்கள் போர்த்துக்கேயரின் தாக்குதலினால் அங்கிருந்து வெளியேறி வண்ணார்பண்ணையை அண்டி வசித்து வருகையில் 1560 களில் இது அமைக்கப்பட்டதாகவும் மேலும் தமது தொழுகையை நிறைவேற்ற பதினெட்டாம் நூற்றாண்டில் சிறிய பள்ளியாக இதனை நிர்மாணித்ததாவும் பின்னர் 1937ல் இதனை பெரிதாக விஸ்தரித்து பெரும் தொழுகை மண்டபத்துடன் கட்டியதாகவும் மேலும் பள்ளிக்கு வருமானத்திற்காக அறைகளையும் கட்டியதாகவும் இடம் பெயர்வுக்குப்பின் சிதைவடைந்திருந்த இப்பள்ளிவாசல் திருத்தியமைக்கப்பட்டுளள்து. இன்று இப்பள்ளிவாசல் ஜும்மா பள்ளிவாசலாகவும் தப்லீக் ஜமாஅத் மர்கஸ் ஆகவும் செயற்பட்டு வருகின்றது
