யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 71 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இவ் ஆலயம் 1622ம் ஆண்டு புரட்டாதி மாதம் 8ம் திகதி யாழ்ப்பாணக் கோட்டையில் அர்ப்பணிக்கப்பட்ட “புதுமை மாதா” கோயில் 1658 க்குப் பின் வந்த ஒல்லாந்தர் கம்பனியினால் ஏ.ழு.ஊ.”முறுணு முiமெ” குருசுக் கோயிலாக மாற்றப்பட்டது. எனினும் இத்தகவல் தெளிவாக இல்லையென நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளர். இக்கோயில் கிறீஸ்தவர்கள் 19ம் நூற்றாண்டில் கோயில் பதிவில் வண்ணார்பண்ணையில் இருந்து வந்தோர் என்ற குறிப்பு உள்ளதால் ஒல்லாந்தர் கால வேதகலாபனையின் நிமித்தம் அக் கிறிஸ்தவர்கள் இங்கு வந்து குடியேறி 18ம் றூற்றாண்டு நடுப்பகுதியில் இங்கு சிறிய கொட்டிலில் கோவில் அமைத்து “புதுமை மாதா” கோவில் என்று அழைத்தனர். 1794ம் ஆண்டில் கோவைக்கு லெயனார்டோ றொபெயரோ கட்டிய யாழ் பெரியமாதா கோவில் புதுப்பிக்கப்பட்ட பொழுது பெரியகோவில் பங்குச்சபையினர் பழைய தூண்களை (1837 – 1852) புதுமை மாதா கோவிலுக்கு அன்பளிப்புச் செய்து அதனை வைத்து கோவிலை கட்டினர். பழைமை வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றதுடன் 1910ல் இவ் ஆலயத்தின் கூரை சுவர்கள் தூண்கள் புதுப்பிக்கப்பட்டன. 1916ல் நிலம் சீமெந்து வேலை செய்யப்பட்டதுடன் 1960 ம் ஆண்டிற்குப் பின் காலப்போக்கில் இக்கோவிலில் அமைந்த கட்டடக்கலை சார்ந்த வேலைப்பாடுகள் சுண்ணாம்பு சேர்ந்த கலவையாதலால் இடிந்து வரும் நிலை ஏற்பட்டு வந்தனால் பங்கு மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டு 2003.02.03 ல் அதி. வண. ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய ஆலயத்திற்கான நிர்மானப்பணிகள் 16.02.2025 ம் ஆண்டிலும் 23.04.2007 ஆம் ஆண்டிலும் நடைபெற்று புதுப் பொலிவுடன் காட்சியளித்து அருள் பாலித்து வருவதுடன் வருடந்தோறும் மாசி மாதம் 2ம் திகதி திருவிழா நடைபெறுகின்றது.