மருதனார்மடம் சந்தியில் உரும்பிராய் வீதியில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது தற்பொழுது உடுவில் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் பல்லப்பை என்னும் பெயருடைய காணியினுள் அமைந்திருந்தது. கல்லூரியை அமைப்பதற்காக காணியினைக் கொள்வனவு செய்தவர்கள் இவ்வாலயத்தினை அகற்றிவிட்டார்கள். இவ்வாலயத்திலிருந்து வைரவர் சூலமானது பல்லியாபுலம் வைரவரின் ஆலயத்தில் நிறுவப்பட்டது. இதன் காரணமாக இவ்வாலயம் பல்லப்பை வைரவர் கோயில் என்றே அழைக்கப்படலாயிற்று. மருதனார்மடம் சந்தையின் காவற்தெய்வமாக அமைந்ததனால் பொது மக்களால் பெருமளவுஆதரவு கிடைக்கப்பெறுவதனால் வருடாவருடம் ஆலயத்திருப்பணி மேலோங்கி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.