களபூமி- திக்கரை என்ற குறிச்சியில் வயல் செறிந்த இப்பகுதியில் வயல்மேட்டில் வேல்வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காசிநாதர் என்ற பெரியார் இழந்த தனது கண்பார்வையை முருகனின் அருளால் மீளவும் பெற்றார். இதனால் அவர் சிறிய ஆலயம் அமைத்து வழிபட்டார்.1880 ஆம் ஆண்டளவில் கனகசபை காசிநாதர் பொறுப்பேற்று பெருங்கோயிலாகக் கட்டி 1902இல் கும்பாபிN~கத்தையும் நடத்தினார்.