Sunday, October 6

சுப்பிரமணியர் தேவஸ்தானம் – பொலிகண்டி

0

வடமராட்சியின் பொலிகண்டியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 1-1-1803 இல் அரோசிமித் உத்தியோகபூர்வமான படத்தின் பிரகாரம் (ழுககiஉடயட ஆயி) உள்ள ஸ்தலங்களில் இடம்பெற்ற ஆலயம் ஆகும். தென் கைலாயபுராணம் எனப்படும் “தட்சணகைலாய புராணத்தின்” 9 ஆம் அத்தியாயத்தில் வியந்து கூறப்பட்ட கந்தவனப் பதியிலே மூர்த்தி, தலம்,தீர்த்தம் ஆகிய முச்சிறப்புக்களையும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாகும். இவ் பழமை வாய்ந்த வன்னிமரத்தினை தலவிருட்சமாகக் கொண்ட கந்தவனம், கந்தாரணகானகம்,கந்தவனக்கடவை ஆகிய சிறப்பு நாமங்களினையுடைய பதியிலே வள்ளி தெய்வானை சமேதரராக சண்முகப்பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். அவ்வகையில் பொலிகண்டி கந்தவனக்கடவை தலத்தின் தொன்மை பற்றியும் அதன் இந்தியத் தொடர்புபற்றியும்நோக்குகையில் இக்கோயில் புராணகாலக்கணிப்புடன் சுமார் இற்றைக்கு இரண்டாயிரம்வருடங்களுக்கு முற்பட்டதாக வரலாற்றாய்வாளர்களினால் கூறப்படுகின்றது. இலங்கையில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட நான்கு தலங்களில் இதுவும் ஒன்று. இலங்கையிலுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ் ஆலயம் ஆனி மாதத்தில் மஹே}ற்சவம் கண்டுநிற்கின்றது. யாழ்ப்பாணத்து சித்தர்களில் ஒருவரான செல்லப்பா சுவாமிகள் “ஓடுங்கடா ஓடுங்கடா கந்தவனத்தில் நல்லசரக்கிருக்கிறது” என தமது சீடர்களிற்கு கூறியுள்ளார். சிவயோகிகள் சுவாமிகளின் யாத்திரைத்தலங் களில் இதுவும் ஒன்று. சுவாமிகள் ஆடமயிலே என்ற பாடலைப்பாட மயில் ஆடிய அற்புதம் நிகழ்ந்துள்ளது. பேரியயானைக் குட்டிச்சித்தர், சித்தானைக்குட்டிச் சித்தர் இங்கு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளனர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!