யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 87 கிராமசேவகர் பிரிவில் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளி வாசல் செய்யது இத்ரிஸ் மௌலானா தைக்கா என்ற நாமம் கொண்ட இச் சின்னப்பள்ளிவாசல் என அழைக்கப்படும் குளத்தடிப் பள்ளிவாசலானது ஆரம்பத்தில் சிப்பம் கட்டுபவர்கள் இளைப்பாறுவதற்காகவும் பணப்பங்கீடு செய்து கொள்வதற்காகவும் இளைப்பாறும் மடத்துடன் கூடிய தைக்காவாக உருவாக்கப்பட்டது. நாளடைவில் இது மடமாகவும் தைக்காவாகவும் இருந்ததே தவிர தொழுகை நடைபெறவில்லை. 1967ம் ஆண்டு வரை இப்பகுதி மக்கள் தொழுகை, தராவீஹ் போன்ற விடயங்களுக்கு பெரிய பள்ளிவாசலுக்கே சென்றனர். பின் 1968ல் மடத்தினை பள்ளிவாசலாக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட போதும் இது நிறைவேறவில்லை. பின் இடப்பெயர்வுக்குப்பின் பள்ளியை திருத்தம் செய்து தொழக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் மையவாடிக்கு அண்மையில் உள்ள பள்ளிவாசல் இதுவாகும். முஸ்லிம் ஜனாஸாவை (இறந்தவரை) இப்பள்ளியில் வைத்து மரணித்தவர்களுக்கான தொழுகையும், பாவமன்னிப்பும் கேட்பது முக்கிய விடயமாகும்.
