கார்மேல் அன்னை கோவில் – குருநகர்யாழ். புனித மரியன்னை பேராலயத்தின் துணைப் பங்குகளில் ஒன்றான குருநகர்கார்மேல் அன்னை ஆலயமானது 1893-1919 காலப்பகுதியில் யாழ்.மறை மாவட்டத்தை மேதகு ஹென்றியூலன் அ.ம.தி ஆண்டகை அவர்கள் பரிபாலித்து வந்த காலத்தில் கத்தோலிக்க சமயப்பணியாற்றுவதற்கென உத்தரிய மாதா கூடம் என்ற அமைப்பினை உருவாக்கிய இக்காலமே கார்மேல் அன்னை ஆலயத்தின் ஆரம்ப காலமாகும். இவ்வூரைச் சேர்ந்த சவரிப்பா என்பவரால் வழங்கிய காணியுடன் பொதுமக்களது பங்களிப்புடனும் மேலதிகமாக காணி கொள்வனவு செய்து கார்மேல்மாதா சிற்றாலயமும் அதனோடு இணைந்ததாக உத்திரிய மாதா கூட்ட அங்கத்தவர்கள் கூடுவதற்கான பெரியதொரு மண்டபமும்அமைக்கப்பட்டது.1906 இல் அதிமேற்றி ராணியார் மேதகு டொன்டன்வில் ஆண்டகையால்அத்திபாரம் இடப்பட்டு 1913 இல் கட்டிமுடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆடி மாதம் பதினாறாம்திகதிக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் மூன்று நாட்கள் திருவிழாக் கொண்டாடப்பட்டுவந்துள்ளது. ஆடி மாதத்தில் கொண்டாடப்பட்டுவரும் புனித யாகப்பரின் நோவினைகளில் பக்தர்கள் பங்கு கொள்ளமுடியாதிருந்தமையினால் ஆடி மாதம் பதினாறாம் திகதிக்குப் பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் வழக்கம் மாற்றம் பெற்றது எனலாம்.