1927.11.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -தட்டாதெரு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த தொழிலதிபர். தந்தையாரால்உருவாக்கப்பெற்று இவரால் நிருவகிக்கப்பட்டு வந்த மில்க்வைற் என்ற பெயருடைய சவர்க்கார நிறுவனத்தின் மூலம் இவரால் ஆற்றப்பட்ட சமூகசேவைகளும், இலக்கியப் பணிகளும் அளவிடற்பாலது. துண்டுப்பிரசுரங்கள், சிறுநூல்கள், கையேடுகள், சஞ்சிகைகள், நிறுவனத்திற்கேயான மில்க்வைற் செய்தி ஏடு என்பவற்றின் மூலம் பல நல்ல செய்திகளையும், சிந்தனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். இவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த மரம் நடுகை திட்டம் மிகுந்த பலனையளித்தமை குறிப்பிடற்குரியது. இதற்காக அரிய, பெரிய தாவர இனங்களை தனது சொந்த முயற்சியால் நாற்றிட்டு இலவசமாக மக்களுக்கு விநியோகித்து எமது மண்ணில் பசுமைப்புரட்சியினை ஏற்படுத்திய பசுமைப்புரட்சியாளன். இவரது தன்னலம் கருதாத சேவை இவருக்குப் பின்னர் வெற்றிடமாகவே உள்ளமை கண்கூடு. மில்க்வைற் கனகராசா என ஈழத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இப்பெரியார் 1998.07.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.