18 ஆம் நூற்றாண்டளவில் தான்தோன்றியதாகக் கருதப்படும் இவ்வாலயம் அக்காலத்தில் பயிர்செய் நிலமாக அமைந்திருந்ததாகவும் அவ்விடத்தில் உழவர்கள் நிலத்தினை உழுத பொழுது ஓர் இடத்தில் இரத்தம் தோய்ந்த மண் காணப்பட்டதனால் அவ்விடத்தினை தோண்டிப் பார்த்தபோது விநாயகப்பெருமானின் விக்கிரகம் ஒன்று காணப்பட்டதாகவும் அவ்விக்கிரகத் தினை அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்கனவே இளைப்பாற்று மடத்திற்கருகே சிறுகொட்டி லமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின்னர் இன்றைய நிலையினை அடைந்தது என்பது வரலாறு. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் ஆனி உத்தரத்தினை தீர்த்தமாகக் கொண்டு பத்து நாட்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கமாகும். இவ்வாலயமானது இளைப்பாறும் மடம், சுமைதாங்கி, தண்ணீர்த்தொட்டி என்ப வற்றினை தன்னகத்தே கொண்டிருக்கின்ற வரலாற்றுப் பெருமை கொண்டதாகும்.