Thursday, May 2

அற்புத நர்த்தன விநாயகர் கோயில் – கோண்டாவில் கிழக்கு

1

பலாலி வீதி – கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் 1880 ஆம் ஆண்டில் நல்லைக் கந்தனின் திருவிழாவினைக் காண்பதற்காக நடந்து செல்லும் பக்த அடியார்களின் தாகசாந்திக்காகவும், இளைப்பாறுவதற்காகவும் கந்தர் கணபதி என்பவரால் ஒரு மடம் அமைக்கப்பட்டு தண்ணீர்ப்பந்தல் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்பந்தலில் ஈடுபட்டு வந்த இவ்வூர் தொண்டர்களால் பெரியபுராணம் பாடுவதும் 1945 ஆம் ஆண்டில் கந்தபுராண படனம் செய்யும் பெருந்தொண்டும் ஆரம்பிக்கப்பட்டது. முந்நூறு ரூபாவினை மூலதனமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொண்டானது விநாயகருக்கு கோயில் அமைக்கும் அளவிற்கு வளர்ந்து 1951 ஆம் ஆண்டு நல்லூர்க் கந்தனின் உற்சவங்கள் நிறைவுற்ற நிலையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டு இன்றைய நிலையினை அடைந்ததெனலாம். அலங்காரத் திருவிழா நடைபெற்ற இவ்வாலயத்தில் 2014 ஆம் ஆண்டு முதன்முதலாக கொடித்தம்பம் உருவாக்கப்பட்டு மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கோண்டாவில் ஆன்மீகஞர்னி குடைச்சுவாமிகளுடைய சமாதி இவ்வாலயத்தின் உள்ளே அமைந்திருப்பதும் சிறப்பிற்குரியதாகும்.

 

Share.

1 Comment

  1. Pingback: வணக்கஸ்தலங்கள் விபரம் - யாழ்ப்பாணப் பெட்டகம்

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!