Friday, May 3

பாக்கியநாதன், இளையதம்பி (கலாநிதி)

0

பாக்கியநாதன், இளையதம்பி (கலாநிதி)

புங்குடுதீவில் பிறந்த இவர் புங்குடுதீவு திரு. வெற்றிவேல் குணரத்தினம் அவர்களின் அறிமுகத்துடன் பிரிட்டிஸ் கவுன்ஸிலில் உயர்பதவியில் இருந்த, முன்னாள் உவெஸ்லி கணித ஆசிரியரான திரு.C.J.T தாமோதரன் அவரது வழிகாட்டலின்படி அமெரிக்காவில் நூலகத் துறைகளில் போதிக்கும் அத்திலாந்திக் சர்வகலாசாலையில் புல்பிரைட் உபகாரச் சம்பளம் பெற்றுக் கல்வி கற்றார். இங்கு நூலகவியல் முதுமாணிப் பட்டம் பெற்றபின், தொழில் அனுபவத்தைப் பெற கலிபோர்ணியாவிலுள்ள பொதுநூலக சிறுவர் பகுதியில் இணைந்து பயிற்சிபெற்றார். 28.04.1964 இல் திரு.வே.இ. பாக்கியநாதன் யாழ்ப் பாணம் பொது நூலகத்தின் பிரதம நூலகராகப் பதவியேற்றார். நூலகம் புதுப்பொலிவு பெற்றுசேவைத்துறைகளில் மேம்பாடுகளை அடைந்து வளர்ச்சி கண்டு வந்தது. பொருத்தமான தளபாடங்களைச் செய்வித்துப் பயன்பாட்டிற்கு உட்படுத்தினார். ஈழத்தமிழர்களின் பண்பாட்டுக் களஞ்சியமாக நூலகம் போற்றப்படும் வகையில் தரமான நூற்சேர்க்கைகளையும் பழைய ஓலைச் சுவடிகளையும் ஒருங்கே திரட்டிப் பாதுகாத்தார். தமது சொந்தப்பாவனைக் காகவும் அரிய நூற் சேகரிப்பு, வாசிப்பு பழக்கத்தினாலும் நூல்களைத் திரட்டி வைத்திருந்த பலரின் சேகரிப்புகள் அன்பளிப்புகளாக நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படப்பாடுபட்டார் சிறுவர் நூலகத்துறையில் மிகுந்த பயிற்சி அனுபவ முடைய நூலகரின் வேண்டுகோளுக்கிணங்க மேயர் அல்பிரட் துரையப்பா, ஆணையாளர் அங்கீகாரங்களுடன் அமெரிக்கத் தூதரக நிதி உதவியுடன் 1050 சதுரஅடி அளவுள்ள இடத்தை ஒதுக்கி சிறுவர் நூலகப் பகுதி உருவாக்கப் பட்டது. திரு.பாக்கியநாதன் 31.12.1968 இல் யாழ். நூலகத்தில் சேவையிலிருந்து விலகினார். பலாலி கனிஸ்ட பல்கலைக்கழகத்தில் நூலகவியல் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். இக்காலப் பகுதியில் நூலகவியல் மாணவர்களுடன் சுமுகமான கற்பித்தலை மேற்கொண்டு வழிகாட்டியாக விளங்கினார். புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நாட்டிற்கும் சென்றார். அங்கிருந்தபடியே நூலகவியல், நூல்தேட்டம் போன்ற நூலாக்கப்பணிகளில் அயோத்தி நூலக சேவை செல்வராஜாவுடன் இணைந்து பல பணிகளை முன்னெடுத்த இவர். 2000.11.06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!