Thursday, May 2

நித்தியானந்தன். து

0

திரு. நித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியலாளராகவிருந்த துரைராஜா கமில்டன் மில்லி தம்பதிகளுக்கு ஏகபுதல்வனாக 25.10.1941 0ல் பிறந்தார். இவர் கொழும்பைத் தனது பிறப்பிடமாகக் கொண்டவர். எனினும் சிறுவயதிலேயே தாயாரை இழந்த காரணத்தினால் இவருடைய பேரனார் நமசிவாயம் என்பவருடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தார். இவர் தனது கல்வியினை ஆரம்பம் முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே பயின்றார்.

    இவர் கல்லூரியில் பயிலும் காலத்திலே இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார். மின் ஒலி, ஒளிச்சாதனங்களைப் பயன்படுத்தி கலைக்கு உதவுவதிலும் விருப்பமுடையவராக இருந்தார். இதன் காரணமாக இவர் ஒலியமைப்பு, ஒளியமைப்புப் போன்ற தொழிலில் வற்றினூடாக கர்நாடக இசை ரசிகனாகவும், தொலைத்தொடர்பு போன்ற சாதனங்களின் தொழில் நுட்பத்தில் வல்லுனராகவும் திகழ்ந்தார். ,வருடைய நண்பர் தொழில் நுட்பவல்லுனர் ஜெயராஜா அவர்களுடன் சேர்ந்து ,த்துறையில் பின்னர் ஒலி ஒளி சாதனங்களின் நுட்பவியல் கூடமானநித்திசவுண்ட்என்னும் ஸ்தாபனத்தை ஆரம்பித்தார்.

திரு.நித்தியானந்தன் அவர்கள் 1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லத்துரை தம்பதிகளின் புதல்வியான புஷ்பதேவி என்பவரைத் திருமணம் செய்து இனிது வாழும் காலத்தில் இவர்களுக்கு தேவானந்தன், சகீலா, ரமணன் என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். திரு.நித்தி அவர்கள் தனக்கிருந்த இசை ஆர்வம் காரணமாக ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவரையாளர் ஆறுமுகம்பிள்ளை அவர்களிடம் வீணை இசையினைப் பயின்றார். வீணையில் வட இலங்கை சங்கீதசபைப் பரீட்சையில் தரம் நான்கு வரை சித்தியடைந்துள்ளார். வீணை வாத்திய இசையைச் சிறப்பான முறையில் சாதகம் செய்து விரைவாக மேடைக்கச்சேரிகள் செய்யவும் ஆரம்பித்தார். இவருடைய காலத்தில் இசை விழாக்கள், பொது இசையரங்குகள் போன்ற பல நிகழ்வுகள் நடந்தன. எனவே பல மேடைகளில் சிறப்பான முறையில் கச்சேரிகளை வழங்கி வந்தார்.

  இவருடைய வீணை வாசிப்பில் சுருதி, லயம் என்பன மிக நுட்பமாக அமையும். மேலும் இராக விஸ்தாரம், தானம் வாசித்தல் தனிச்சிறப்புடையது. உருப்படிகள், ஸ்வரம் போன்றவற்றை வாசிக்கும் போதும் காலப்பிரமாணம் நிதானமுடையது எனலாம். இக்கட்டத்தில் பக்கவாத்தியக்காரர்க்கும் வாசிப்பது இலகுவாக இருக்கும். 1981ஆம் ஆண்டு நல்லை ஆதீனத்தில் நடந்த இசை விழாவில் வீணையில்நகுமோஎன்னும் உருப்படியை ராக ஆலாபனையைத் தொடர்ந்து வாசித்து பலரின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். சிலகாலம் இவரின் கச்சேரியில் இருவீணை இசையாகவும் அமைந்திருந்தது. இவருடைய குருவின் மகனான திரு.சத்தியசீலன் என்பவரை இணையாகச் சேர்த்து பல கச்சேரிகள் செய்ததுண்டு. 1982 ஆம் ஆண்டு ஒரு தடைவ காரைநகர் இந்துக்கல்லூரி அரங்கில் சுவிஸ்நாட்டுக் குழுவினருக்கென ஏற்பாடாகியிருந்த இசை அரங்கில் இவருடைய இரு வீணை இடம் பெற்றது. இந்நிகழ்வில் பெரும் வரவேற்பும் பாராட்டும் இருவருக்கும், பங்கு பற்றிய மற்றக்கலைஞர்களுக்கும் கிடைத்தது.

 நித்தி அவர்கள் மற்றும் கலைஞர்கள், ரசிகர்களுடன் பழகும் சிறப்பு தனித்துவம் உடையது. அன்பும் அடக்கமும், கனிவும், சாந்தமும் நிறைந்தவர் எனலாம். மேலும் நித்தி அவர்களுடைய ஒலி, ஒளிச் சாதனச்சுருதி நுட்பம் யாழ்ப்பாணத்தின் இசை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியது எனலாம். இவரின் பிள்ளைகளும் தந்தையின் கலை அன்பைப் போற்றி தாமும் வீணை, வாய்ப்பாட்டு, வயலின் போன்ற கலைகளைப் பயின்று வருகின்றனர். வீணைக்கலைஞர் நித்தியானந்தன் அவர்கள் சிறப்பான முறையில் இசைக்குத் தொண்டாற்றி நல்ல மதிப்பும் பேரும், புகழும் பெற்று விளங்கி வந்தார். கலைஞர் அவர்கள் தமது 54 ஆவது வயதில் 21.|5.1994 அன்று இவ்வுலகைத் திடீரென விடுத்து நிலையுலகு சென்றமை கவலைக்குரியதே. அமரர் நித்தி அவர்களின் இசைக்கலைச் சேவை கலையுலகிற்கு கிடைத்த பெரும் பணியாகும். எனினும் இவருடைய இசைக்கலை, தொழில் நுட்பம் என்பன இவருடைய பிள்ளைகள் மூலமாக தொடரும், வளரும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!