1914-08-31 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு உடுத்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். விடிவெள்ளி என்ற பத்திரிகையை நடத்தி வந்தமை யினால் விடிவெள்ளி முத்தையா என அழைக்கப்பட்டவர். மரபுவழிசார் கவிதை புனைவதில் சிறப்பான ஆற்றலுடையவர். உடுத்துறை திருச்சபையின் விசித்திரசரிதம், தமிழ் அறிவு, கட்டுரைக் கதிர், தமிழ் சூழற் பயிற்சிகள், சிலுவையும் செந்தமிழும் முதலான பல நூல்களை வெளியிட்டவர். இலங்கைத் தமிழ்ப் புத்தக வெளியீட்டகம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணத் தமிழாசிரியர் சங்கம், யாழ். மாவட்ட சனசமூகநிலையங்களின் சமாசம் ஆகிய அமைப்புக்களில் பொறுப்புள்ள பதவிகளை வகித்தவர். யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச வெளியீடான சமூகத்தொண்டன் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1964-05-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.